ஸ்மைல் ப்ளீஸ்! : இதற்குத்தான் ஆசைப்பட்டாராம் ஸ்ரீகாந்த் தேவா

Get real time updates directly on you device, subscribe now.

srikanth1

கிட்டத்தட்ட 100 படங்களை நெருங்கி விட்டார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

ஆனால் தனி இசை ஆல்பம் செய்தே ஆக வேண்டும் என்கிற அவருடைய நீண்ட கால கனவு ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்கிற ஆல்பத்தில் நிறைவேறியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட ‘வந்தே மாதரம்’ ஆல்பம் உலகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாமும் இந்த மாதிரி ஒரு நல்ல ஆல்பம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.

அப்போது தான் இயக்குநர் மகேஷ் இசையமைப்பாளர் தயா சைரஸ் உடன் என்னை வந்து சந்தித்தார். நாங்க ஒரு ஆல்பம் பண்றோ. அதுல ஒரு பாட்டுக்கு நீங்க டான்ஸ் ஆடணும்னு கேட்டாங்க. அடடே இது நாம நெனைச்சதாச்சேன்னு சந்தோஷப்பட்டு அவங்களோட இந்த ஆல்பத்துல ட்ராவல் ஆகிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இந்த ஆல்பத்துல உள்ள யுகபாரதி எழுதின ‘புன்னகை ஒன்று தான் பூமியின் தாய்மொழி’ பாடலைப் பார்த்த எல்லோரும் புதுசா இருக்குன்னு சொல்றாங்க… என்றார் ஸ்ரீகாந்த் தேவா.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். இன்றைய அவசர யுகத்தில் பலரும் சிரிப்பதையே மறந்து விட்டார்கள். அவர்களை புன்னகை செய்ய வைப்பதே இந்த ஆல்பத்தின் நோக்கம்.

சிரிப்பு ஒவ்வொருவருக்கும் சொந்தம். நோயில்லாத வாழ்க்கைக்கு சிரிப்பு எல்லோருக்கும் அவசியம் என்பதை வலியுறுத்தவே ஸ்மைல் ப்ளீஸ் என்கிற இந்த ஆல்பத்தை எடுத்தோம் என்ற இயக்குநர் மகேஷ் மற்ற மொழிகளில் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் தனி ஆல்பங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதே போல ஒரு நிலையை தமிழிலும் உருவாக்க வேண்டுமென்கிற ஆசை எனக்குள் இருந்தது.அதன் முதல்படி தான் இந்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்றார்.