‘மயிலு’க்கு வயசு 52 : பூங்கொத்து அனுப்பி வாழ்த்திய விஜய்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு இளையதளபதி விஜய்யின் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார் 16 வயதினிலே மயிலு ஸ்ரீதேவி.
50 வயதைத் தாண்டிய பிறகும் மவுசு குறையாத ஸ்ரீதேவியைத் தேடி பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வர ஆரம்பித்துள்ளன.
வயது ஏறிக்கொண்டே போனாலும் இம்மியளவும் இளமை குறையாத ஸ்ரீதேவி இன்று தனது 52வது பிறந்தநாளை சென்னையில் மிக எளிமையாக கொண்டாடினார்.
அவருக்கு இளையதளபதி விஜய் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துடன், பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் மற்றும் புலி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.