நான் ஒன்னும் சொல்லலீங்க… : சிம்பு விவகாரத்தில் பதறிய ஸ்ரீகாந்த்!
நடிகர் சிம்புவை பற்றி ட்விட்டரில் தவறான பதிவுகள் வருகின்றன. அதுவும் ஸ்ரீகாந்த் என்ற கணக்கில் இருந்து வருகிறது.
இது பற்றி நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
“டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் போலியானவை. நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு கணக்கினையும் வைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். சிம்பு என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
அஜித், சிம்புவின் ரசிகர்களை பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் நான் அளிக்கவில்லை. என் பெயரில் போலியாக கணக்கினை வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.