Star- விமர்சனம்
ஸ்டாராக துடிக்கும் சாதா இளைஞனுக்கு வரும் இன்னலும் இடைஞ்சலுமே கதை
அப்பா உழைக்கிறார். அம்மாவும் அக்காவும் அப்பத்தாவும் வீட்டில் இருக்கிறார்கள். கவின் தான் ஒரு ஹீரோவாகியே தீருவேன் என வேலைவெட்டிக்கு எதுவும் செல்லாமல் தீவிரமாக நடிப்பு வாய்ப்பு தேடி அலைகிறார். இடையே அவருக்கு ஒரு காதலும் வந்து சேர்கிறது. கூடவே வாய்ப்பும் வரும் வேளையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. அதன்பின் கவின் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை
அளவெடுத்து தைத்த சட்டை போல பிட்-ஆக இந்த கேரக்டருக்கு பொருந்தியுள்ளார் கவின். அவரின் நடிப்பை கொண்டாடும் அளவிற்கு இன்னும் சில நல்ல சீன்களை இயக்குநர் வைத்திருக்கலாம். லால் எனும் மகா நடிகன் பல இடங்களில் அதிர வைக்கிறார். அவரின் மனைவியாக வருபவரும் பின்னியுள்ளார். இரு நாயகிகளில் முதலாமவர் ஓரளவு நடிக்கிறார். இரண்டாவதாக வருபவர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். சிறுசிறு கேரக்டர்களும் நல்ல தேர்வாக அமைந்துள்ளனர்
யுவன் தனது இசையால் பல இடங்களில் வசியம் செய்கிறார். பாடல்களும் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஓவர் டூட்டி பார்த்துள்ளார். விஷுவல்ஸில் பெரிய பட்ஜெட் என்ற எபெக்ட் தெரிகிறது. எடிட்டர் இன்னும் சில இடங்களில் கத்திரியை வைத்திருக்கலாம். குறிப்பாக க்ளீசரின் போட்டு இஷ்டத்திற்கு அழுதிருக்கும் எல்லோரின் காட்சிகளையும் வெட்டி கடாசிருக்கலாம்
ஒரு ஹீரோ ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்லும் போது நாமும் அவர் கூடவே பயணிக்கவேண்டும். ஆனால் இப்படத்தில் அது நிகழவில்லை..காரணம் ஹீரோ கேரக்டர் ஒன்றும் அவ்வளவு அழுத்தமாக எழுதப்படவில்லை. மேலும் ஹீரோ சில நேரம் எடுக்கும் முடிவுகளுக்கும் சரியான காரணம் சொல்லப்படவில்லை. இன்னும் திரைக்கதையை செம்மை செய்து, நிறைய ட்ராமா காட்சிகளை ரீ வொர்க் செய்திருந்தால் இந்த ஸ்டார் 5 ஸ்டார் வாங்கியிருக்கும்..
இப்போது?
2.5/5