‘உத்தம வில்லன்’ ரிலீஸ் : திருப்பதி பிரதர்ஸ் உடன் கைகோர்த்த ஸ்டூடியோ க்ரீன்

Get real time updates directly on you device, subscribe now.

studio-green

மிழ்சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக கோலோச்சு வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படங்களை தயாரிப்பதோடு தங்கள் வேலை முடிந்து விட்டது என்றில்லாமல் நல்ல தரமான படங்களையும் ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கும் வினியோக உரிமையையும் சிறப்பாக செய்து வருகிறது.

‘கொம்பன்’ படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் ரிலீசான மணிரத்னத்தின் ‘ஒ கே கண்மணி’ படத்தையும் இந்த நிறுவனம் ரிலீஸ் செய்து வெற்றிப்படமாக்கியுள்ளது.

அடுத்து ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படத்தையும் வருகிற மே 1-ம் தேதி ரிலீஸ் செய்கிறது.

தற்போது புதிதாக அதே மே 1-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ள உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ படத்தை என்.எ.ஸ்.சி மற்றும் டி.கே ஆகிய இரண்டு ஏரியாக்களில் ரிலீஸ் செய்ய களத்தில் இறங்கியிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

Related Posts
1 of 4

தொடர்ந்து கமல் படங்களுக்கு எதிராக பலரும் ஏதாவது ஒரு அமைப்பு பிரச்சனையை கிளப்பி அதன் ரிலீசை தடுக்கும் முயற்சியில் இறங்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

இதற்கிடையே ‘கொம்பன்’ படத்துக்கு வந்த எல்லா சிக்கல்களையும் நேருக்கு நேர் சந்தித்து அப்படத்தை தைரியமான ரிலீஸ் செய்து வெற்றிப்படமாக்கியும் காட்டிய ஸ்டூடியோ க்ரீன் ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் வேலையில் இறங்கியிருப்பது கமல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

உத்தம வில்லனைத் தொடர்ந்து அதே திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தையும் ஸ்டூடியோக்ரீன் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த படங்கள் மட்டுமில்லாமல் அது வாங்கி வெளியிடும் படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் ‘உத்தம வில்லன்’ படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.