விஜய் ஆண்டனிக்கு ஜோடியான ‘சின்ன வயசு’ அனுஷ்கா!

Get real time updates directly on you device, subscribe now.

sushma

லீமின் வெற்றியைத் தொடர்ந்து தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் என்.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மாராஜ், பசுபதி, மனோபாலா, ஜெகன், எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.

தெலுங்கில் ‘மாயா’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மாராஜ், அசப்பில் சின்ன இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். இவர் தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமாகிறார்.

எப்படி இருந்தது ‘இந்தியா பாகிஸ்தான்’ எக்ஸ்பீரியன்ஸ் இதோ அவரே சொல்கிறார்…

“‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அப்படங்களை பார்த்து இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தார் இயக்குனர் ஆனந். இந்த படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாப்பாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே முடித்தேன்” என ஆரம்பித்தார் சுஷ்மா

Related Posts
1 of 19

“தமிழ் எனக்கு அதிக பரீட்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஓரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேசுவது மிகவும் கடினமாய் இருந்தது. ‘பலகோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல்காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வது மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.”

“நாய்கள் என்றாலே எனக்கு பயம் படத்தின் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சி படமாக்கும் போது நாய் என் மீது தாவி என்னை கடிதத்தில் நான் கீழே விழுந்து விட்டேன். மேலும் இப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாத அளவிற்கு ஒரு சம்பவமாய் இது அமைந்தது.”

இப்படத்தில் மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது. அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்றுக் கற்றுக் கொண்டேன். மிகவும் நல்ல மனிதர் விஜய் ஆண்டனி சார். யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர்’’ என்றார் சுஷ்மா ராஜ்.

அடடே கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க்-அவுட் ஆகியிருக்கு போல…