‘தமிழரசன்’ படத்துக்காக விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்த ரம்யா நம்பீசன்

Get real time updates directly on you device, subscribe now.

சொந்தத் தயாரிப்புக்கு குட்பை சொன்ன விஜய் ஆண்டனி வெளிக்கம்பெனி படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அந்த வரிசையில் எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரித்து வரும் ‘தமிழரசன்’ படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் வில்லனான சோனு சூட் நடிக்கிறார்.

Related Posts
1 of 160

பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டணிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

சென்னையில் நடத்தப்பட்ட இப்படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

அதோடு 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை நான்கு கேமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் என்கிறது படக்குழு. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.