‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் 28 மார்ச் 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

‘தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்’ படத்திற்காக இதுவரை சமூக ஊடகங்களில் வெளியான போஸ்டர்கள், வீடியோக்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நிச்சயம் கவரும் திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் நீண்ட காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரமிப்பைத் தூண்டும் இந்தக் கதை, நஜீப்பின் நிஜ வாழ்க்கையைத் தேடும் இன்னல்கள் நிறைந்த அவரது பயணத்தைச் சுற்றி வருகிறது. பிருத்விராஜ் சுகுமாரனின் பிரமிக்க வைக்கும் மாற்றம், பல்வேறு தோற்றங்கள், பரந்த பாலைவனத்தின் அற்புதமான காட்சிகளுடன், இந்தப் படத்தின் டிரெய்லர் நமக்கு அழகான ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.