திருச்சிற்றம்பலம்- விமர்சனம்
மயில் இறகு போல சில படங்கள் நம்மை வருடிச்செல்லும் அப்படியொரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் மித்ரன் ஜவஹர்
தனுஷுக்கு காதல்கள் செட்டாகாது என்பது தான் கதையா என்றால் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் கதையை நகர்த்தும் காரணியாக காதல்தான் இருக்கிறது. தன் உற்ற தோழி நித்யாமேனென், தாத்தா பாரதிராஜா உதவிகள் மூலமாக இரண்டு காதல்களில் விழுந்து எழுகிறார் தனுஷ். இனி தனுஷின் காதலி யார்? என்ற கேள்விக்கு இடையில் அப்பா செண்டிமெண்ட், பிரண்ட் செண்டிமெண்ட் என நிறைய மெண்ட்களும் வருகின்றன
தனுஷ் தன் நடிப்பில் மிக அருமையான மெச்சூட் தன்மையை காட்டியுள்ளார். பாரதிராஜாவோடு அவர் அடிக்கும் லூட்டிகள், நித்யாமேனென் உடன் இணைந்து அவர் பயணிக்கும் காட்சிகள் எல்லாமே ஆகத்தரம். நித்யாமேனென் தான் இப்படத்தின் ஆன்மா எனலாம். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அவரே ஸ்கோர் செய்கிறார். பாரதிராஜா நடிகராக இப்படத்தில் இமையம் தொட்டிருக்கிறார். பிரகாஷ்ராஜ் தன் அனுபவ நடிப்பால் அதகளம் செய்திருக்கிறார். பிரியாபவானி சங்கர், ராஷிகண்ணா இருவருக்கும் சிறிய ரோல்கள் தான். சரியாக செய்துள்ளார்கள். முனிஷ்காந்த் சற்று நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் ரிப்பீட் ரகம். பின்னணி இசை ஓ.கே ரகம். கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம்
முன்பாதியில் இருந்த எதார்த்தம் பின்பாதியில் இல்லை. பின்பாதி முழுக்க முழுக்க சினிமாவாக மாறியிருப்பது சின்ன நெருடல். அதேநேரம் படம் அப்பப்போ நெஞ்சை வருடவும் தவறவில்லை. யூகிக்க கூடிய முடிவாக இருந்தாலும் பேமிலியோடு பார்க்கக் கூடிய பக்கா எமோஷ்னல் பேக்கேஜ் என்பதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்
3/5
#Thiruchitrambalam