ஸ்கூல் படிக்கும் போதே த்ரிஷாவை துரத்தினேன்… : கமல் சிஷ்யரின் ‘குசும்பு’

Get real time updates directly on you device, subscribe now.

Trisha1

‘பாபநாசம்’ வெற்றிக்குப் பிறகு தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷலனல் சார்பில் தூங்காவனம் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

அவருடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகி சேது, சம்பத், மதுஷாலினி, உமா ரியாஸ் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.

ஜிப்ரான் இசையமைப்பில் கமலிடம் உதவியாளராக பணிபுரிந்த ராஜேஷ் எம்.செல்வா இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த இப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷனில் கலந்து கொண்ட கமல்

“நான் இதுவரை இரண்டு மொழிகளில் தயாரான 24 படங்களில் நடித்திருக்கிறேன். இரண்டு மொழிகளில் நடிப்பது அவ்வளவு ஈசியான வேலை இல்லை. ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஈஸியாக நடிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன்.

நாங்க, இங்க எந்த குழப்பமும் இல்லாமல் நிக்கிறோம், மிகவும் நம்பிக்கையோட இருக்கோம். பல விஷயங்களை இந்தப் படத்துக்காகச் செய்திருக்கோம். எதிர்காலத்தில் இன்னும் அதிகமான திட்டமிடலை ஒழுங்குடன் செய்வோம்.

Related Posts
1 of 17

இனி ராஜ்கமல் நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமாக இருக்கும். அந்த நம்பிக்கையை இந்தப்படம் தான் எனக்குக் கொடுத்தது. என்றார்.

பின்னர் பேசிய படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா எல்லோருமே என்னிடம் கேட்கின்ற கேள்வி எப்படி ஒரு புதுமுகமான நீங்கள் கமலை சாரை வைத்து படம் இயக்குகிறீர்கள்? என்பது தான்.

நானும் என் நண்பர்களுடம் ஆழ்வார்பேட்டை சிக்னலை தாண்டும் போது இதுதான் கமல் சாரோட ஆபீஸ் எல்லோரும் கும்பிட்டுக்கங்கடான்னு சொல்லுவேன். ஒருநாள் அந்த அலுவலகத்துக்குள் நுழைய முடியுமா? என்று யோசித்தேன். அடுத்து கமல் சாருடன் புகைப்படம் எடுக்க முடியுமா? என்று யோசித்தேன். இப்போது அதே நிறுவனத்தில் ஒரு படத்துக்கு இயக்குநராகியிருக்கிறேன்.

கமல் சாரை வைத்து இயக்குவதற்கு முன்பு பயம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் நாம் கமிட்டான உடன் என்னை நம்பிக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு. அதை சிறப்பாகச் செய்ய வேண்டுமென்கிற பொறுப்பு வந்து விட்டது.

என்றவர் அடுத்து த்ரிஷாவைப் பற்றிப் பேசியது தான் ஹைலைட்.

”இந்தப் படத்துக்கு த்ரிஷாவை ரொம்ப வித்தியாசமா இதுவரை நீங்க பார்த்திராத லுக்குல காட்டியிருக்கோம். அவங்களை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். அவங்க ஸ்கூல் படிக்கும் போதே பாலோ பண்ணியிருக்கேன். ( இப்படி சொல்லும் போது மேடையில் இருந்த த்ரிஷா வெட்கத்தில் நெளிந்தார் ) இப்போ அவங்களை என்னோட படத்துல ஹீரோயினா நடிக்க வெச்சதுல ரொம்ப சந்தோஷம்” என்றார்.

கமலோட சிஷ்யராச்சே இது கூட இல்லேன்னா எப்டி…?