ஹாலிவுட் படம் ட்ராப்சிட்டியில் ஜிவி பிரகாஷ்
நடிகர் ஜிவி பிரகாஷ் ட்ராப் சிட்டி என்ற படம் மூலமாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். டெல்.கணேசன் தயாரிக்கும் இப்படத்தில் பிராண்டன் ஹீரோவாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் ஜிவி பிரகாஷ் பேசியதாவது,
இந்தப்படம் எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். படத்தின் ஹீரோ
பிராண்டன் நல்ல மனிதர். அவரும் ஒரு மியூசிக் லவ்வர். அவரோடு வொர்க் பண்றது நல்லாருந்தது..ஹாலிவுட் மாதிரி இடங்களில் தொடர்ந்து பயணிக்க ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன”. என்றார்