அஜித் பேரைச் சொன்னோம், பிரச்சனைகள் தீர்ந்தது! : நெகிழ்ந்த அறிமுக இயக்குநர்!
‘டெய்சி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த படம் உனக்கென்ன வேணும் சொல்லு என்று மாறியிருக்கிறது.
இப்படத்தை இயக்கும் ஸ்ரீநாத் ராமலிங்கம் அமெரிக்காவில் சினிமாவை படித்து விட்டு வந்தவர். குறிப்பாக சினிமாவின் டெக்னிக்கலாக விஷயங்கள் அத்தனையையும் ஒரு கை பார்த்தவர்.
முதல் படமாக தமிழில் ஒரு பேய் த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் மனம் திறந்து சில விஷயங்களைப் பேசினார்.
இந்தப் படத்துக்கு முதல்ல டெய்சின்னு பேர் வெச்சிருந்தோம். அப்போ ஏகப்பட்ட பிரச்சனைகளை நாங்க சந்திச்சோம். ஒரு வழியா படத்தை முடிச்சு ஆரா சினிமாஸ் மகேஷ் சார்கிட்ட போட்டுக் காண்பிச்சோம். அவர் டைட்டிலை மத்தும் மாத்துங்க நானே படத்தை ரிலீஸ் பண்றேன்னு சொன்னார். அவர் சொன்னபடியே படத்துக்கு ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பேர் வெச்சோம்.
இது அஜித் சாரோட ‘என்னை அறிந்தால்’ படத்துல வர்ற ஒரு பாடல் வரி. இந்த டைட்டிலை வெச்சதும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுடுச்சு.
நாங்க எல்லோருமே அஜித் சாரோட ரசிகர்கள் தான். ஆனால் என்னை யாருன்னே அவருக்கு தெரியாது. இந்த டைட்டிலை கேட்ட உடனே ஓ.கே சொன்ன அஜித் சாருக்கும், அதை கொடுத்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சாருக்கும், இயக்குநர் கெளதம் மேனனுக்கும் நன்றி தெரிவிச்சுக்கிறேன் என்று நெகிழ்ந்தார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.