‘மே 1’ உழைப்பாளர் தினத்தில் ‘உத்தம வில்லன்’ ரிலீஸ்
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படம் வருகிற மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் ரிலீசாகிறது.
கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, இயக்குநர் கே.விஸ்வநாத், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘உத்தம வில்லன்’.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 10- ம் தேதி வெளியாகவில்லை. இதனால் படத்தின் சென்சார் வேலைகள் எப்போது முடியும்? பட ரிலீஸ் எப்போது நடக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், ‘உத்தம வில்லன்’ படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அப்படத்துக்கு க்ளீன் ‘யு’ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
படம் சென்சார் ஆனதைத் தொடர்ந்து மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.