துபாய் ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த உலக நாயகன்!

Get real time updates directly on you device, subscribe now.

kamal

ப்போதுமே கோடைகாலம் போல காட்சியளிக்கும் துபாய் கடந்த இரண்டு வாரங்களாக குளிர்பிரதேசமாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படம்!

கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படத்தை துபாயில் கமல்ஹாசன், ஜெயராம், நாசர், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ரமேஷ் அரவிந்த், ஜிப்ரான் உட்பட படக்குழுவினர் அனைவருடனும் ‘கோல்டன் சினிமாஸ்’ திரையரங்கில் படத்தை ரசித்துப் பார்த்தனர்.

Related Posts
1 of 8

தங்களின் அபிமான நடிகருடன் அவரது படத்தைப் பார்த்தது, இந்த கோடை ஆரம்பமே துபாய் மக்களுக்கு ‘கோடை வெப்பத்தை’ தகர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இதனால் ரசிகர்கள் எல்லோருமே மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதற்கு முன்னர், தமிழ் எப்.எம். நடத்திய ‘உத்தம வில்லன்’ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் உலகநாயகனுடன் உரையாடியபடியே உணவருந்தும் வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்கள்.

அமீரக மக்களுக்கு, ‘உத்தம வில்லன்’ படக்குழுவினரைச் சந்தித்தது, தங்கள் சொந்த பந்தங்களைப் பார்த்தது போல் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் எப்.எம்.மின் நிர்வாக இயக்குனர் திரு.ரியாஸ் பாஷா மற்றும் திரு.ராம் ஆகியோர் உடனிருந்தனர்.