‘வாலு’ 17-ஆம் தேதி வரும்… ஆனா வராது..?
இன்னும் எத்தனை ரிலீஸ் தேதிகளைத் தான் அறிவிக்கப் போகிறார்களோ என்று சிம்புவே டயர்டாகிற அளவுக்கு வாலு ரிலீஸ் தேதிகள் மாறிக்கொண்டே இருந்தன.
ஒரு வழியாக சிம்புவின் அப்பாவே தனது சொந்த பேனரில் வாலுவை ரிலீஸ் செய்ய முன் வந்ததால் அப்பாடா ஒருவழியா படம் ஜூலை 17-ஆம் தேதி ரிலீசாக போகுது என்று நிம்மதியடைந்தார்கள் சிம்பு ரசிகர்கள்.
இப்போது அந்த நிம்மதிக்கும் பங்கம் வருகிற அளவுக்கு மீண்டும் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது வாலு திரைப்படம்.
படத்தோட ரிலீஸை எங்ககிட்ட கமிட் பண்ணிட்டு இப்போ வேற ஒரு கம்பெனிக்கு உரிமையை கொடுத்துருக்காங்க என்று வாலு படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது மேஜிக் ரேஸ் என்கிற நிறுவனம்.
இது குறித்து அவர்கள் தொடந்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது : ‘‘ வாலு படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலும் ரிலீஸ் செய்ய எங்களது நிறுவனத்திற்கு ரூபாய் 10 கோடிக்கு 2013-ல் கமிட்மெண்ட் போட்டார்கள். இப்போது அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக வாலு படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். எனவே எங்களை தவிர வேறு நபர் மூலமாக ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரனை நாளை நடைபெறுகிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்பது தெரிந்த பிறகு தான் வாலு 17-ஆம் தேதி ரிலீசாகும். அதுவரை ‘வாலு’வுக்கு வரும்… ஆனா வராது…? நிலைதான்!