பிரபுதேவாவிடம் சிக்கிய வேதிகா!
முகத்தை அடிக்கிற கலருக்கு இந்நேரம் வேதிகா ஒரு ரவுண்டு வந்திருக்க வேண்டும். சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தமிழில் அவரால் முன்னணி கதாநாயகி இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
தற்சமயம் மலையாளம் கன்னடம் என சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் வேதிகாவை தனது சொந்தத் தயாரிப்பில் மீண்டும் தமிழில் அறிமுகப்படுத்துகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த பிரபுதேவா அதில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வருகிறார்.
அதில் ஒன்று தான் வினோத் ஜெயராஜ் இயக்கும் படம். ஐசரி வேலனின் பேரன் வருண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தான் கமிட்டாகிக்கும் வேதிகா
சொற்பப்படங்கள் இருந்தாலும் இதுவே எனக்குப் போதும். நல்ல கதைகள் அமைந்தால் நடித்து விட்டுப் போகிறேன் என்கிறார்.
சான்ஸ் கெடைக்கலென்னா வேற என்னத்தை சொல்றது..?