‘விஜய் – 59’ படத்துக்கு அட்லி கொடுத்த கேரண்டி!

Get real time updates directly on you device, subscribe now.

vijay-59

மிழ்சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் யார் என்று கேட்டால் அடுத்த நொடி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவை கை காட்டுவார்கள்.

எந்தப் படமாக இருந்தாலும் விளம்பரம் செய்வதில் அவர் மிஞ்ச ஆளே இல்லை. அந்தளவுக்கு ஒரு படத்தை பிரம்மாண்டமாக ஆரம்பிப்பதில் இருந்து அதை ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கும் வரை அவர் செய்யும் பிரம்மாண்டம் பார்ப்போரை வியக்க வைக்கும்.

இதோ இன்னொரு பிரம்மாண்டத்தை தர இளையதளபதி விஜய்யுடன் மீண்டும் கை கோர்த்து விட்டார். துப்பாக்கியின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ஆரம்பித்திருக்கும் புதிய படத்துக்கு ‘விஜய் – 59’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ( இன்னும் ஒரிஜினல் டைட்டில் ரெடியாகல. அதுவரைக்கும் இதுதான் டைட்டில்!)

இதில் விஜய்யுடன்,சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க பிரபு, ராதிகா மற்றும் ஒரு முக்கியமான கேரக்டரில் பிரபல இயக்குனர் மகேந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். அதுமட்டுமல்ல. விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகையான மீனாவின் குழந்தை நைனியாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

இப்படி பல புதுமைகள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமாக இல்லாமல் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது.

Related Posts
1 of 98

அதிக கூட்டம் இல்லாமல் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் முக்கிய திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார் இயக்குனர் அட்லி.

பூஜை முடியவும் நிருபர்களை சந்தித்த அவர் ராஜா ராணி படத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட் பண்ணினதுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன் என்றவாரே பேச ஆரம்பித்தார்…

நான் விஜய் சாரோட தீவிரமான ரசிகன். அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணனுகிறது என்னோட நீண்ட நாள் கனவு. அந்தக்கனவு இந்தப்படம் மூலமா நிறைவேறியிருக்கு. இதுல இதுவரை ரசிகர்கள் பார்த்திராத விஜய்யை பார்க்கலாம். என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவைப் பற்றி பேசும்போது : எல்லா டைரக்டர்களுக்கும் தாணு சார் மாதிரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கணும். நான் என்ன கேட்டோனோ அதை எல்லாமே செஞ்சுக் கொடுத்தார். ஏன் எதுக்குன்னு கேட்டதே இல்லை.

இதுவரைக்கும் தாணு சார் 32 படங்களை தயாரிச்சிருக்கார். இது அவருக்கு 33-வது படம். நான் அவர்கிட்ட சொன்னேன். சார் இதுவரைக்கும் நீங்க தயாரிச்ச 32 படங்களை விடவும் இந்தப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளித்தரக்கூடிய அளவுக்கு மெகா ஹிட் படமா இருக்கும். அதுக்கு நான் கேரண்டின்னு சொன்னேன் என்றார் நம்பிக்கையோடு…!