அடுத்த படம்? : கூட்டணியை மாற்றினார் விஜய்!

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. விஜய்யின் 59-வது படமான இதைத்தொடர்ந்து அவருடைய 60 வது படத்தை இயக்குவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
எஸ்.ஜே.சூர்யா, தனி ஒருவன் இயக்குநர் மோகன்ராஜா இருவரில் ஒருவர் தான் விஜய்யின் 60-வது படத்தை இயக்குவார்கள் என்று நேற்றுவரை செய்திகள் வெளியானது.
இருவரில் விஜய்யின் சாய்ஸ் யாராக இருக்கும் என்று தெரியாத நிலையில் எஸ்.ஜே. சூர்யா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போய் விட்டார். அந்தப்படம் முடிய ஒரு வருடம் ஆகுமாம். அதன் பிறகு தான் விஜய்யை வைத்து இயக்குவார் எஸ்.ஜே.சூர்யா.
இதற்கிடையே விஜய்யின் அடுத்த படத்தை அழகிய தமிழ் மகன் இயக்குநர் பரதன் இயக்கப் போகிறார் என்றும், அப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.