விஜய் ஆண்டனியின் ‘காக்கி’யை கைப்பற்றிய நிறுவனம்
விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாய்ந்த இயக்குனரான
ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றியிருக்கிறது.
விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா ‘சன் டிவி புகழ்’ கதிர் மற்றும் மலர் நடித்திருக்கிறார்கள்.
ஜீன் மாதத்தில் துவங்கிய முதற்கட்ட படப்பிடிப்பில் ஏறத்தாழ 50 சதவீத காட்சிகள் ஷிமோகா, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப் பொழுதுபோக்குப் படமான இப்படத்தின் எடிட் செய்த வெர்ஷனை பார்த்த பின்னர், படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார்கள்.
ஜனவரி 2020ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர், ட்ரெய்லரை அக்டோபர் மாதமும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.