‘நற்பணி’ – இனி இதுவே விஷாலின் பிறந்தநாள் பணி!
வழக்கமாக தனது பிறந்தநாளை நண்பர்களுடன் பார்ட்டி வைத்துக் கொண்டாடும் நடிகர் விஷால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை இலங்கை அகதிகளுடன் எளிமையாகக் கொண்டாடினார்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்த விஷால் ICSA சென்டரில் இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளுடன் நற்பணி நாளாக கொண்டாடினார்.
விழாவில் அவர் பேசியதாவது :
நான் தாமிரபரணி படப்பிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போது தான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரிய வந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்து கொண்டேன்.
மேலும் அவர் இயக்குனராக இருக்கும் “OFERR” என்னும் NGOவை பற்றிய என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பணி செய்ய ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன். ஒவ்வொரு முறை நான் “OFERR” சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்ப்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால் தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதுபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை.
நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் ‘ட்ராபிக் கான்ஸ்டபுள்’ ஆக இருந்து நற்பணி அற்ற நினைபவர்களுக்கு சரியான வழியை காட்டவே விரும்புகிறேன். நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்தி விட்டு சென்றதாகவும், அதை கருத்தில் கொண்டு கார்த்தி பாரிஸில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டி கொடுதுள்ளார், அதை போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார்.
நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன் என்று கூறிய விஷால். அங்கு வந்திருந்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSAவை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும் , உடலால் சவால் விடப்பட்ட மாணவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன் கொடையாக கொடுத்தார். அதுபோக அவர்களுக்கு ஷூஸ் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார். மேலும் சாக்ஸ் வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாக கூறினார்.
தனி ஒருவனாக இருந்து பணியாற்றுவதை விட பலர் பேர் கைகோர்த்து இந்த நல்ல விஷயத்தை செய்தால் சிறப்பாக அமையும் என்று கூறினார் விஷால்.
அப்போ இனிமே நற்பணி – இதுவே இனி விஷாலின் பணி அப்படித்தானே..?