குழந்தைகள் மற்றும் பெண்களையும் கவரும்’வெப்பன்’-நடிகை தன்யா ஹோப்!
நடிகை தன்யா ஹோப் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களாலும் விரும்பப்படும் நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ளார். குறுகிய காலத்தில், பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார் தான்யா. இப்போது, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள ’வெப்பன்’ படத்திலும் அவர் வலுவான கதாபாத்திரத்தைப் பெற்றிருக்கிறார்.
“குகன் சார் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது நடிகர்கள் சத்யராஜ் சார், ராஜீவ் மேனன் சார், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதுதான். இதுவரை நான் நடித்தப் படங்களில் இருந்து இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் செய்யாத வித்தியாசமான ஒன்று. என்னுடையது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த எல்லோருடைய கதாபாத்திரங்களுமே வலுவானதாக இருக்கும். ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்வையாளர்களுடன் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.