வெப்பன்- விமர்சனம்
ஒரு சூப்பர் ஹுயூமன் கதை
ஹீரோ வசந்த் ரவி சூப்பர் ஹுயூமனை கண்டு பிடிப்பதில் பேரார்வம் கொண்டவர். அவர் தேனியில் ஒரு சூப்பர் ஹுயூமன் சம்பந்தப்பட்ட ஒரு விசயத்தைச் செய்கிறார். அதன் விளைவு வேறொன்றாக மாற, ஹீரோ ஒரு கும்பலிடம் சிக்குகிறார். சிக்கலில் இருக்கும் ஹீரோ எப்படி சிக்கலை தீர்க்கிறார் என்பதும், அந்த சூப்பர் ஹுயூமன் யார் என்பதும் தான் படத்தின் கதை
ஹீரோவாக வசந்த் ரவி ஆக்சன் காட்சிகளில் அனல் பறத்துகிறார். அவரின் கேரக்டருக்கான ரைட்டிங்கில் நல்ல டெப்த் இருக்கிறது. சத்தியராஜ் கேரக்டரும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அவர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் வேறு கேரக்டர்கள் யாரும் பெரிதாக ஈர்க்கவே இல்லை.
பின்னணி இசையில் ஜிப்ரான் பல மேஜிக்-ஐ செய்துள்ளார். பிரபு ராகவ் சிறப்பாக ஒளிப்பதிவை கொடுத்துள்ளார். டெக்னிக்கல் டீம் மாங்கு மாங்குவென உழைத்து படத்தை ஹாலிவுட் தரத்திற்கு இழுத்து வந்துள்ளனர்
படத்தின் முதல் பாதி திரைக்கதை கூட ஓகே ரகம். இரண்டாம் பாதியில் ஆடியன்ஸ் தலைக்குள் ஆயிரம் கார்கள் ஓடுவது போல தெறிக்கவிட்டுள்ளனர். பழைய கதையை புரியாத திரைமொழியில் சொன்னால் ரசிகர்களுக்குப் பிடித்துவிடும் என்று இயக்குநர் நம்பியிருக்கிறார் போல. So sad
2.25/5