கட்டிப்புடிக்க வசதியா ‘குள்ளமான’ ஹீரோயின் : புதுமுக ஹீரோவுக்காக மெனக்கிட்ட இயக்குநர்!
ஹீரோன்னாலே நல்லவனாத்தான் இருக்கணும்கிற சினிமாவுக்கான நியதி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகிறது. சமீபகால படங்களில் வரும் ஹீரோக்கள் எல்லோருமே ரெளடியாக இருக்கிறார்கள். அவர்களை ஹீரோயின்களை துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள்.
இந்த வழக்கமான பார்முலாவிலிருந்து விலகி ‘யானும் தீயவன்’ என்ற டைட்டிலில் சற்றே வித்தியாசமான படத்தை எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் பிரசாந்த்.
“பெப்பி சினிமாஸ்” சார்பில் ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன் வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, தமிழில் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ், படத்தொகுப்பு பிரசன்னா. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் சீசன் 3 யில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரசாந்த் இயக்குநர் ஹரியிடமும் உதவியாளராக பணிபுரிந்தவர்.
அவருடைய உதவியாளர் என்றால் கேட்க வேண்டுமா? படத்தை ஆக்ஷன் கலந்த த்ரில்லராக எடுத்திருக்கிறார்.
ஒருவன் எவ்வளவு தூரத்துக்கு நல்லவனாக இருந்தாலும் அவனை சீண்டிக்கொண்டே இருக்கும் போது அவனும் கெட்டவனாக மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறான்.
கல்லூரி படிப்பை முடித்த கையோடு எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடும் ஹீரோவுக்கும், அவரது நண்பர்களுக்கும் ஒரு கும்பலால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருகிறது. எப்படியாவது அதிலிருந்து மீண்டு விடலாம் என்று நினைத்தாலும் கடைசியில் சீண்டியவர்களுக்கு அவர்கள் செய்த செயல்களாலேயே பதிலடி கொடுக்க கெட்டவன் ஆகிறார் ஹீரோ இதுதான் யானும் தீயவன் படத்தோட மெயின் தீம் என்கிறார் இயக்குநர்.
இப்படத்துக்காக ஹீரோயின் தேடலில் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. “ஹீரோவோட உசரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு கெடைச்சா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டோம். ஏன்னா லவ் சீன்ஸ்ல ஹீரோ ஹீரோயினை கட்டிப்பிடிக்கும் போது அவரோட நெஞ்சுக்க அடங்கிற மாதிரி இருக்கணும். அப்போ தான் யதார்த்தமா இருக்கும். அதுக்காகவே வர்ஷாங்கிற புதுமுகத்தை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?