ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’!
எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது. இன்று பூஜையுடன் ‘ரெயின்போ’ படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.