காரை பரிசாக பெற்ற இயக்குநர்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment  தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான்.

இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”.

குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்  படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி  உற்சாகப்படுத்தியுள்ளார்.

இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் தற்போது,  Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில்,  ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இயக்குநராக முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்து, தற்போது ஹீரோவாகவும் மாறியிருக்கும்  அபிஷன் ஜீவிந்த் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, தன் காதலியை கரம்பிடிக்கிறார்.

தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கார் வழங்கிய புகைப்படங்களை பகிர்ந்து,  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.