‘அஜித் கூப்பிடுவார்…’ : காத்திருக்கும் அம்பானி!
படப்பிடிப்பில் தன்னோடு சேர்ந்து நடிக்கும் வளரும் நடிகர்களுக்கு முடிந்தளவு உதவிகளைச் செய்து வருகிறார் நடிகர் அஜித்.
தன்னோடு வீரம் படத்தில் நடித்த காமெடி நடிகர் அப்புக்குட்டிக்கு தனி போட்டோஷூட்டே நடத்தி புதுப்படங்களில் ஹீரோவாக நடிக்கிற அளவுக்கு ஆளையே மாற்றினார்.
அந்தளவுக்கு வளரும் நடிகர்களுக்கு உதவிகளைச் செய்து வரும் அஜித்தின் பார்வை மீண்டும் தன் மேல் படாதா என்று காத்துக் கொண்டிருக்கிறார் அப்புக்குட்டி போன்ற இன்னொரு வளரும் நடிகர் அம்பானி சங்கர்.

லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜி’ படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அந்தப்படத்தில் அறிமுகமான அம்பானி சங்கர் என்ற நடிகர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
உருவத்தில் சின்னவராக காட்சியளிக்கும் இவரை க்யூட் பாய் என்று தான் அழைப்பாராம் அஜித். தொடர்ந்து சிம்புவின் வல்லவன் கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்த இவருக்கு புதிதாக எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
இருந்தாலும் மீண்டும் அஜித் படத்தில் நடிக்க ஒரே ஒரு வாய்ப்பாவாது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவருடைய கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறாராம் அம்பானி ஸாரி… அம்பானி சங்கர்!