விஜய் படங்களின் ஒவ்வ்வொரு நிகழ்வும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
அப்படித்தான் கடந்த ஒரு வாரமாக ‘தெறி’ படத்தின் டீஸர் இன்று ஜனவரி 26 குடியரசு தினத்தில் வெளியாகும் என்று செய்தி பரவியது. இதனால் விஜய் ரசிகர்கள் டீஸரை வரவேற்று குடியரசு தினத்தை கொண்டாட காத்துக் கொண்டிருந்தனர்.
அட்லி இயக்கத்தில் தயாரான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். படத்தில் விஜய் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்திருப்பதால் அந்த கெட்டப்புகள் எப்படி இருக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சம் எகிறிக் கிடக்கிறது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தியாக ‘தெறி’ படத்தின் டீஸர் இன்று வெளியாகாது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
மொத்தம் 50 வினாடிகள் கொண்ட இந்த டீஸரில் விஜய் மட்டும் தான் வருகிறார். ஒவ்வொரு சீனும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதால் காட்சிகளுடன் பின்னணி இசையும், அதற்கான தொழில்நுட்ப வேலைகளும் முடியாமல் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டு விட்டது.
ஆகையால் அவசர கோலத்தில் டீஸரை வெளியிடாமல் பக்காவாக தயாரானதும் வெளியிடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறது ‘தெறி’ டீம்.
எனவே இன்று வெளியாகும் என்று சொல்லப்பட்ட ‘தெறி’ படத்தின் டீஸர் பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீசாகும் என்று தெரிகிறது.