‘ரஜினி முருகன்’ வசூல் முருகன் ஆனாலும் ஆனது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எல்.ஐ.சி கட்டிடத்தை விட பல மடங்கு உசரத்துக்கு போய் விட்டது.
அந்தப் படத்தின் வெற்றியை தக்க வைக்கும் விதமாக இப்போது ‘ரெமோ’, அதைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்’ பட இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஒரு படம் என சொந்தத் தயாரிப்புகளை பிரம்மாண்டமாக்கி வருகிறார்.
இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து வெளிப்படங்களும் அவரைத் தேடி வருவதால் வருகிற வாய்ப்பை விட மனசில்லாமல் அவைகளையும் கமிட் செய்து போட ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் இப்போதைக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்கிறார். அவர் கேட்ட உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு பேமண்ட்டாக கொடுக்க முன் வந்தது தான் அதற்கு முக்கிய காரணமாம்.
ஆமாம், 28 கோடி ரூபாய் கேட்டார் சிவகார்த்திகேயன்.
பிசினஸ் இருப்பவருக்கு கேட்டால் கொடுப்பதில் தவறில்லையே என்று ஏ.எம்.ரத்னமும் அந்த தொகைக்கு ஓ.கே சொல்லி படப்பிடிப்புக்கான வேலையை ஆரம்பிக்க சொல்லி விட்டாராம்.
அதானே ஓடுற குதிரையில பணம் கட்டினா என்ன தப்பு?