துல்கர் சல்மானின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !

பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.

இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் – பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று வெகு சுவாரசியமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், “Love Will Spark Again” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இது காதலையும் நம்பிக்கையையும் மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அழகான காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த துல்கர் சல்மான் வெட்கப் புன்னகையுடன் கீழே பார்க்கிறார். இளநீல நிற சல்வார் அணிந்த பூஜா ஹெக்டே, அவரைப் பார்த்து மனம் திறந்து சிரிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Actor Dulquer Salmaanactress Pooja HegdeDirector Ravi NelakuditiSri Sri movie