ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ் ஆகும் பாக்கியராஜின் 3.6.9 என்ற உலக சாதனை படம்!

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடிப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் 3.6.9 புதிய படத்தின் படப்பிடிப்பு வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குநர் சிவ மாதவ் படைத்துள்ளார்.இந்த திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் 24 கேமராக்களை கொண்டு படமாக்கி இப்படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது.

ர் பாக்கியராஜ் கூறுகையில்…..

3.6.9 திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் படமாக்கி உலக சாதனபடைத்துள்ளார்கள்
இதில் நானும் பங்கு பெற்றேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்..இதற்கு முயற்சி எடுத்த இயக்குனர் சிவ மாத மற்றும் தயாரிப்பாளர் பிஜிஎஸ் க்கு வாழ்த்துக்கள்..

இப்படம் வரும் ஆகஸ்ட் 25 உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது இந்த புது முயற்சிக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்..

3.6.9 MovieActor K. Bhagyaraj