வழக்கம் போல இந்த ஆண்டும் தேசிய விருது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
‘ஐ’ படத்தில் பெரும் உழைப்பைப் போட்டு நடித்த விக்ரம் அதற்காக உடலை மெலிய வைக்க செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ஆனால் அவருக்கு விருது தரப்படவில்லை. மாறாக
உடல் நோகாமல் திரையில் வந்து போன அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல தாரைதப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே படத்தில் கரகாட்டக்காரியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வரலட்சுமியை கண்டுகொள்ளவில்லை.
இப்படி 63-வது தேசிய விருதுகள் அறிவிப்பு பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் வேளையில் ‘இறுதிச்சுற்று’ நாயகன் மாதவனும் தேசிய விருது குறித்து தனது கவலையை தெரிவித்திருக்கிறார்.
‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங். ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்’ ஹிந்தி படத்தில் நடித்த கங்கனா ரனாவத். இருவருக்குமே தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்த எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்ட மாதவன் ” நான் நடித்த இரண்டு படங்களின் ஹீரோயின்களுக்கும் தேசிய விருது கிடைத்தது
சந்தோஷம். இருவருமே அதற்கு தகுதியானவர்கள்தான். அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் எனக்குத்தான் அதிர்ஷ்டமில்லை. நானும் விருது வாங்கும் நாள் ஒரு சந்தர்ப்பத்தில் வரும்’ என்று கூறியிருக்கிறார்.
அதாவது ”தேசிய விருது திறமையைப் பார்த்து கொடுப்பதில்லை” என்கிற அர்த்தத்தில் கிண்டல் செய்திருக்கிறார் மாதவன்.
கரெக்ட்டா தானே சொல்லியிருக்கீங்க…