‘தேசிய விருது’ விவகாரம் : ஷங்கருக்கு ஏம்ப்பா டென்ஷன் ஏத்துறீங்க?

63-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் சர்ச்சைகளும் கிளம்பி ஆரம்பித்து விட்டன.

ஆள் பார்த்து கொடுக்கப்படுவதாகவும், உண்மையான திறமைசாலிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதில் பெரும்பாலானோர் கருத்து சொன்னது ஷங்கர் இயக்கத்தில் ரிலீசான ஐ படத்தைப் பற்றித்தான்.

அதில் உயிரைக் கொடுத்து நடித்த சீயான் விக்ரமுக்கு விருது அறிவிக்கப்படாதது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களையே கடுப்பாக்கி விட்டது.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூட தனது ட்விட்டரில் இதுகுறித்தான கவலையை தெரிவித்திருந்தார்.

இப்படி நாலாபுறமும் விக்ரமுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் எந்திரன்2 படப்பிடிப்பில் இருக்கும் ஷங்கரிடம் போன் போட்டு விருது கொடுக்காதது பற்றி துக்கம் விசாரிப்பது போல விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

ஏதோ ஒன்று ரெண்டு பேர் விசாரித்தால் பரவாயில்லை, ஊரே போனைப் போட்டு விசாரித்தால் மனுஷன் அவரும் என்ன தான் செய்வார்?

அந்த டென்ஷனிலிருந்து மீள யார் போன் அடித்தாலும் எடுப்பதில்லையாம், தானாக பேச விருப்பப்பட்டால் மட்டுமே போன் போட்டு பேசுகிறாராம்.

63rd National Film Awards63வது தேசிய விருதுகள்Director ShankarEnthiran 2I FilmVikramஎந்திரன் 2விக்ரம்ஷங்கர்
Comments (0)
Add Comment