இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார்.
பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.