‘கத்தி’க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் என்னவானது என்பது எல்லோர் மண்டையையும் குடைந்து கொண்டிருந்த கேள்வி?
ஹிந்தியில் ‘அகிரா’வை இயக்கிக் கொண்டிருந்தாலும் தமிழில் அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதால் வந்த கேள்வி அது.
இப்போது அந்தக் கேள்விக்கு உறுதியான விடை கிடைத்திருக்கிறது.
ஆமாம், பிரபல தெலுங்கு ஹீரொ மகேஷ்பாபுவை தமிழில் மிகப்பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது ‘பிரம்மோற்சவம்’ தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் மகேஷ்பாபு அடுத்த படத்துக்கு பூரி ஜெகன்நாத்திடமும் ஏ.ஆர்.முருகதாஸிடமும் கதை கேட்டிருந்தார். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
‘பிரம்மோற்சவம்’ முடியவும் ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ்பாபுவின் புதுப்படம் ஆரம்பமாகும்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் 80 கோடி பட்ஜெட்டில் இயக்க ஓ.கே சொல்லியிருக்கிறார்.
தமிழ் ரசிகர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தான் சரியான ஆள் என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்தாராம் மகேஷ்பாபு.