சரத்குமாரின் மற்றொரு புதிய பட அப்டேட்!

‘2018’, ‘ரேக்காசித்திரம்’ மற்றும் ‘மாளிகப்புரம்’ போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது.

முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தனித்துவமான திரைக்கதை அமைப்பிலும், புத்தாக்கமான இயக்கத்திலும் பெயர் பெற்ற இவர், நடிகர் சரத்குமாரை இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் காட்டவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் நவம்பர் 2026-க்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.
நம்பிக்கை தரும் தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் மற்றும் திறமைமிக்க இயக்குநர் கமல் பிரகாஷ் இணையும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 12’ திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Actor Sarath Kumardirector Kamal Prakash