திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’. 120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் முதல் 5 தொடர்கள் ஆக-23 முதல் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.