தமிழ் திரை உலகில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கே ஆர்!

திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கே ஆர், பல புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அவரது வித்தியாசமான முயற்சிகளில் சில பின்வருமாறு: உலகப் புகழ் பெற்ற ‘மை டியர் குட்டிச்சாத்தான்’. இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான இது மாபெரும் வெற்றி பெற்றது. குழந்தைகளுக்கான 3டி படமான ‘ஸ்பை கிட்ஸ்’ அனகிலிஃப் (Anaglif) தொழில்நுட்பத்தில் வெளியாகி பாராட்டுதல்களையும் வெற்றிகளையும் குவித்தது. ‘எங்களையும் வாழ விடுங்கள்’ திரைப்படம் விலங்குகளை பேச வைத்ததோடு விலங்குகளுக்காகவும் பேசியது. ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘பேசும் படம்’ வசனங்களே இல்லாமல் வாழ்த்துகளை அள்ளியது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை பறைசாற்றிய ‘டான்சர்’ உள்ளூர் முதல் சர்வதேச விருதுகளை பெற்றது. இந்த வரிசையில், கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தை புதுமையான முறையில் வெளியிட கே ஆர் தயாராகி வருகிறார்.

டிசம்பர் 22 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி மூலமாக இப்படம் வெளியாக உள்ளது. கலகலப்பான நகைச்சுவை திரைப்படமான ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கே ஆர் அறிவித்துள்ளார். இலவச டிக்கெட்டுக்கான கட்டணத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்வார்.

Aayiram Porkaasukal movieactor Vidaarthdirector Ravi murugaiya