கதைக்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கொண்ட பியா பாஜ்பாய் – அடடே… ஆச்சரியக்குறி!

‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்துக்குப் பிறகு மலையாளம், ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த பியா பாஜ்பாய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. மலையாள நடிகர் டொவினோ தாமஸ், ஹீரோவாக நடிக்க இவர்களுடன் பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பியா ”இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த விஜயலட்சுமி மற்றும் சரிகம நிறுவனத்துக்கு நன்றி. இது எனக்கு ரொம்பவே சவாலான படம். இந்த கதாபாத்திரத்தை செய்ய எனக்கு எந்த படமும் இன்ஸ்பிரெஷனாக இல்லை. ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறைய கேள்விகளை முன் வைக்கும். இதில் நடித்தது பெருமையான விஷயம் என்றார். இப்படத்தின் கதைக்காகவும், தன்னுடைய கேரக்டருக்காகவும் நிஜமாகவே மொட்டை போட்டு படத்தில் நடித்திருக்கிறார் பியா பாஜ்பாய்.

‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்துக்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். ஒரு சில மலையாள படங்களை முடிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தான் விஜயலட்சுமி மேடம் என்னை தொடர்ந்து கதை கேட்க சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்.
அவரை பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது தான் அவர் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவானின் மகள் என்பது தெரிய வந்தது. கதை கேட்டேன், சிறப்பான கதை. நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு படத்துக்காக சென்னையில் ஒரு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது தான் பியாவை முதன் முறையாக சந்தித்தேன்.

தமிழ் எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்த படத்தில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. தமிழ் சினிமாவில் இது ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும். இதே படம் மலையாளத்திலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர், நடிகைகளுடன் நடித்தது நல்ல அனுபவம் என்றார் ஹீரோ டொவினோ தாமஸ்.

விஜிக்கும் எனக்கும் இருக்கும் உறவைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே போகலாம். என் இளம் வயதில் வெளிநாட்டு படங்களில் வருவது போல அபார்ட்மென்டில் தனியாக வசிக்கணும் என்பது என் ஆசையாக இருந்தது. விஜியும் நானும் அந்த அபார்ட்மென்டில் வசிக்கணும்னு நினைச்சேன்.

யாருக்கும் தெரியாத இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஜியின் அண்ணன் ரவி பந்துலுவின் கன்னட படத்தில் வேலை செய்திருக்கிறார். அதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

சின்ன வயதில் இருந்த விஜி, இன்னமும் அப்படியே உண்மையாக இருக்கிறார். 22 வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்காங்க. அவர் அழைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்காக கொடுத்திருக்கிறார். எல்லோரிடமும் ரொம்ப செல்லமாக பேசி வேலை வாங்குவார். டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய் ஜோடி படத்தில் பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க. ரொம்ப நாள் கழித்து பிரபுவுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார் நடிகை சுஹாசினி.

abhiyum anuvumAbhiyum Anuvum Movie Press MeetAbhiyum Anuvum Movie Press Meet Newspia bajpaitovino thomas
Comments (0)
Add Comment