நோ சீரியஸ்… ஒன்லி ஜாலி… : ஆர்யாவின் புது ரூட்டு!

ரு ரூட்ல எந்தப் பிரச்சனையில் இல்லாம போய்க்கிட்டிருக்கும் போது யாராவது முள்ளுக் கம்பியைக் கொண்டு காலைக் குத்திக்க ஆசைப்படுவாங்களா..?

அப்படி துன்பமில்லாத ஒரு முடிவைத் தான் எடுத்திருக்கிறாராம் ஆர்யா.

இன்றைய தேதியில் ஆர்யாவுக்கு ஐந்து படங்கள் இருக்கின்றன. அந்த ஐந்துமே ஹெவியாக இல்லாமல் லவ், காமெடி, பேமிலி செண்டிமென்ட் என லேசான சப்ஜெக்ட்டுகள் தான்.

ஏன் சீரியஸ் படங்களில் ஆர்யா நடிக்க மாட்டாரா?

ஆமாங்க இனிமே சீரியஸ் படம் பண்ற ஐடியாவே ஆர்யாவிடம் இல்லையாம்.

பட்டியல், வட்டாரம், சர்வம், நான் கடவுள் ன்னு சீரியஸ் படங்கள் எல்லாமே ஆர்யாவுக்கு தோல்விப் படங்களாக அமைந்து விட்டது.

அதே நேரத்தில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை ராஜா ராணி என லவ், காமெடி, செண்டிமெண்ட் கலந்த லேசான சப்ஜெக்ட்டை கொண்ட படங்கள் எல்லாமே அவரது ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது.

இதனால் இனிமேல் இந்த மாதிரியான படங்களே நம்ம கேரியருக்கு போதும் என்கிற மூடுக்கு வந்து விட்டாராம் ஆர்யா.

சமீபத்தில் சலீம் என்கிற சீரியஸ் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் நிர்மல் குமார் ஆர்யாவிடம் கதை சொல்லப் போக கேட்ட வேகத்தில் ஸாரி பாஸ். இந்த சப்ஜெக்ட் ரொம்ப ஹெவியா இருக்கு. என்றூ நிராகரித்து அனுப்பியிருக்கிறார்.

என்ன ஆர்யா? இப்படி ஒரு முடிவெடுத்துட்டீங்க…

Actor Arya
Comments (0)
Add Comment