தஞ்சையில் துவங்கியது அதர்வா படம்!

Lyca productions திரு சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, தஞ்சையில் இனிதே தொடங்கியது !லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “Production No.22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

Actor AtharvaaActor RajkiranActress Ashika RanganathActress Radikaadirector Sarkunam