‘அட்டகத்தி’ படத்துக்கு முன்பு வரை துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்த தினேஷ் ‘அட்டகத்தி’ படத்தில் ஹீரோவானதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘குக்கூ’, ‘விசாரணை’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தாலும் சில தயாரிப்பாளர்கள் மட்டும் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தின் பப்ளிசிட்டிக்கு நாயகனும், நாயகியும் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை தான். அப்போது அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் முழுமையாகப் போய்ச் சேரும்,
ஆனால் அஜித், ஜெய், சிம்பு இவர்கள் வரிசையில் நானும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம் தினேஷ்.
இதற்கும் தினேஷ் நடித்து அரை டஜன் படங்கள் தான் வந்திருக்கின்றன. அதற்குள் இப்படி ஒரு கண்டிஷன் போடுவது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு விட்டால் பரவாயில்லை. 3 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும். அதில் நயா பைசா கூட குறையக் கூடாது என்று கறார் வேறாம்…
பொழைக்கிற புள்ள இப்படியா பண்ணணும்?