கார்த்தியின் வருத்தத்தில் நியாயம் உள்ளது

கொரோனா நோயால் உலகம் பாதிக்கப்பட்டு பற்றியெரிந்து வருவது ஒருபுறம் என்றால் மனிதநேயத்தை மறந்து சிலர் நடந்துகொள்ளும் இன்னும் அச்சத்தை வர வைக்கிறது. சமீபத்தில் மறைந்த மருத்துவர் சைமன் அவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய இடம் கொடுக்காமல் மக்கள் பிரச்சனை செய்தது அநீதியின் உச்சம். நாம் சந்தித்த இயற்கை இன்னல்களில் இருந்து மீண்டு வந்ததிற்கான காரணங்களில் மனிதநேயம் மகத்தான காரணமாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால் தற்போது மனிதநேயமற்ற செயல் கொரோனாவை விட அதிகமாகப் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து நடிகர் கார்த்தி, “டாக்டர் சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது விருத்தத்தில் அவ்வளவு நியாயமிருக்கிறது!

actor karthi
Comments (0)
Add Comment