மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.
ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி, இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.