மகிழ்ச்சியில் திளைக்கும் மகேஷ்பாபு ரசிகர்கள்


தெலுங்கு திரையுலகின் ஒரு சூப்பர் ஸ்டாராக எப்பொழுதுமே இருந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் தமிழில் நடித்த ஸ்பைடர் படம் நன்றாகப் போகவில்லை. இருப்பினும் தனக்கு மற்றொரு படம் தமிழில் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பி வருகிறார். அவரது நம்பிக்கை விரைவிலேயே நிறைவேறி விடும் போல் தோன்றுகிறது.

ஏனென்றால் இரு தினங்களுக்கு முன்னர் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இயக்குநர் இராஜமவுலி தான் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்குப் பின்னர் தனது புதிய படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைய இருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இராஜமவுலி படம் என்றால் கண்டிப்பாக பல மொழிகளில் உருவாகும். அதனால் தமிழில் இது பிரபாஸ்க்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்ததைப் போல் தனக்கும் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் என்று மகேஷ் பாபு நம்பலாம். இந்த செய்தி வந்ததில் இருந்து மகேஷ்பாபுவின் ரசிகர்கள் உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள். இராஜமவுலியுடன் மகேஷ் இணைவது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ActorMaheshbabuMagashbabuMaheshbabu
Comments (0)
Add Comment