அமேசான் பிரைமில் ‘கார்மேனி செல்வம்’ !

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் காட்டுகிறது. பண மற்றும் மனப் போராட்டங்களுக்கு நடுவே ஒரு மனிதன் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கார்மேனி செல்வம், படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதில் நீடிக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறது: மன அமைதி, நேரம், குடும்பம் ஆகியவற்றை இழந்த பிறகு கிடைக்கும் நிதி சுதந்திரம் உண்மையில் மதிப்புள்ளதா?

“கார்மேனி செல்வம் படத்தை திரையரங்கங்களில் பார்த்த பெரும்பாலானோர் விருதுகளை வெல்வதற்கு தகுதியான படம் என்று புகழ்ந்தனர். மனிதர்களின் உணர்வுகளை மிகச் சரியாக பிரதிபலித்திருப்பதாக பாராட்டுகளை பெற்ற படத்தை தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

“இந்த படம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — இப்போது அது சாத்தியமாகிறது.” என்று இயக்குநர் Ram Chakri கூறினார்.

யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, ஜெகன் ஆர்.வி மற்றும் தினேஷ் எஸ் ஆகியோரின் படத்தொகுப்பு, மியூசிகிளவுட் ஸ்டுடியோஸ் மற்றும் டெக்னாலஜிஸ்நிறுவனத்தின் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு படத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளன.

மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து, மக்களின் இதயங்களைத் தொடும் உண்மைக்கு நெருக்கமான மனிதநேயமிக்க கதைகளை உருவாக்குவதில் உறுதியுடன் பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Actor Gautham Vasudev Menonactor SamuthirakaniCarmeni Selvam movie