பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவர் இதயத்தையும் பதம் பார்த்தது சாத்தான் குளம் சம்பவம். அனைவரும் அந்தச் சம்பவத்திற்கு எதிராக தங்கள் குரலை பலமாக பதிவு செய்தார்கள். யாராலும் நேரில் சென்று கொலையுண்ட ஜெயராஜ் பென்னீக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாத சூழலை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நடிகர் சரத்குமார் அதையும் மீறி சாத்தான்குளம் சென்று வந்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி
தலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார். அன்மையில் மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்கு சென்று அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய்
5 லடசம் நிதி வழங்கினார்.
சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும் , ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றிருந்தனர்..!!