நான் சுத்தமானவன், எந்த தவறும் செய்யவில்லை : கண்ணீர் விட்ட சரத்குமார்!

டிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ அமோக வெற்றி பெற்றதையடுத்து இன்று முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

என்னை ”வெளிநாடுகளில் இருந்தெல்லாம் என்ன சரத் ஊழல் பண்ணிட்டீங்க…”ன்னு செய்திகள் வருதேன்னு விசாரிக்கிறாங்க.. அதையெல்லாம் கேட்கும் போது என் மனசு வலிக்கிறது என்றவர் எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தந்தை கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் 2004ல் ரூ.4.2 கோடியாக இருந்த நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது. விஜயகாந்த் தலைவராக இருந்தபோது, கடன் அடைக்கப்பட்டு ஒரு கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது.

2007ல் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.3 கோடி உள்ளது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தான் அதற்கான அக்ரிமெண்ட் வேலைகளை ஆரம்பித்தோம். என்றவர் செப்டம்பர் 29ம் தேதியே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். அப்போது ஒப்பந்தம் செய்யப்பட்ட பேப்பர்களை நிருபர்களிடம் காண்பித்தார்.

என்னைப் பற்றி தொடர்ந்து வரும் தவறான செய்திகளால் மனம் வேதனைப்பட்டேன். அதையெல்லாம் படித்து என்ன சரத் சார் உங்களைப் பற்றி இப்படியெல்லாம் வருகிறதே என்று எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தாரே என் மீது பரிதாபப்பட்டார்கள். அதன்பிறகு அவர்களே மனமிறங்கி சரி உங்கள் நற்பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுகிறோம் என்றார்கள்.

இந்த ஒப்பந்தம் என்னைப் பொருத்தவரை ஒரு சிறந்த ஒப்பந்தம். வந்திருக்கும் புதிய தலைமையிடம் எனது அணி சார்பில் வெற்றி பெற்ற ராம்கியிடம் கொடுத்து அனுப்புவேன். அவர்கள் அதை படித்துப் பார்த்து அதில் உள்ள அம்சங்கள் பிடித்திருந்தால் கண்டிப்பாக அதை செயல்படுத்த நான் உதவி செய்வேன்.

இனி நான் நடிகர் சங்கத்தில் எந்தப் பொறுப்புக்கும் வர மாட்டேன். நான் 35 வருடமாக சினிமா, அரசியல் என பொது வாழ்க்கையில் இருந்திருக்கிறேன், நான் சுத்தமானவன், எந்த தப்பும் தவறும் செய்ததில்லை. அப்படிப்பட்ட என்மீது இந்த நடிகர் சங்கத் தேர்தலை ஒட்டி சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் என் மனதை ரொம்பவே காயப்படுத்து விட்டது. அதனால் இந்த ஏழு கோடி தமிழ் மக்களுக்கு மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இருக்கின்ற மக்களுக்கும் நான் எந்தத் தவறும் செய்யாதவன் என்பதைச் சொல்லத்தான் இந்த சந்திப்பை நடத்த வந்தேன். என்றவர் சிறிது நேரம் பேச முடியாமல் கண்கலங்கினார். அதைப் பார்த்ததும் அருகில் இருந்த் நடிகர் ராம்கியின் கண்கல்ங்கினார்

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். இனி எனக்கு நடிகர் சங்கத்தில் வேலை இல்லை. புதியவர்கள் நடிகர் சங்க நலனுக்காக எந்த நேரத்தில் உதவி கேட்டாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

ஓப்பந்தத்தை ரத்து செய்ததை தேர்தலுக்கு முன்னரே அறிவித்திருந்தால் உங்கள் அணி வெற்றி பெற வாய்ப்பு அமைந்திருக்குமே? என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சரத்குமார் அப்படியெல்லாம் யோசிக்கவில்லை. இந்த விஷயத்தைச் சொன்னால் அவர்களுக்குப் பலமாகவும், உங்களுக்கு பலவீனமாக இருக்கும் என்று பலரும் என்னிடம் ஆலோசனை சொன்னார்கள். அதனால் நான் அதை சொல்லவில்லை.வெற்றி பெற்றப் பிறகு சொல்ல நினைத்திருந்தேன் என்றார்.

இதற்கிடையே இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பாண்டவர் அணியின் தலைமை கட்டிட ஒப்பந்தத்தை ரத்து செய்த விஷயம் எங்களுக்கு தெரியாது. அந்த ஆவணம் வந்தவுடன் அடுத்த க்கட நடவடிக்கையைப் பற்றி யோசிப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

Nadigar Sangamsarathkumar
Comments (0)
Add Comment