நாக்கை அடக்கி கொஞ்சம் அமைதியாக இருந்திருந்தால் இந்நேரத்துக்கு சித்தார்த் தெலுங்கில் அரை டஜன் படங்களோடு பிஸியாக இருந்திருப்பார்.
அவர் நடித்த ஒரு படத்தின் பிரஸ்மீட்டிலேயே அங்குள்ள மீடியாக்களை வண்டை வண்டையாக திட்டித்தீர்க்க, கொதித்தெழுந்த தெலுங்கு மீடியாக்கள் மொத்தமும் சித்தார்த்தை ஓரங்கட்டியது. அதன் விளைவாக தெலுங்கு திரையுலகம் கை விட வேறு வழியில்லாமல் தமிழுக்கு படையெடுத்தார்.
”தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஹீரோவானவர் அந்தப்படம் தந்த வெற்றியில் சந்தோஷப்பட்டவருக்கு அடுத்தடுத்து ரிலீசான காவிய தலைவன், எனக்குள் ஒருவன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டது.
இதனால் மீண்டும் பட வாய்ப்புகளை தேடும் சூழலில் இருந்தவர் தற்போது சுந்தர்.சியின் அரண்மனை படத்தின் 2-ம் பாகத்தில் தானே நடிப்பதாக கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே சத்தமே இல்லாமல் ஹிந்திப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் சித்தார்த். தீரஜ் இயக்கும் அந்தப்படத்தைத் தயாரிப்பதும் சித்தார்த் தான். புகழ்பெற்ற ஜில்ஜங்ஜக் என்கிற குறும்படத்தைத்தான் அவர் முழுநீளப்படமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறாராம்.
அந்தப்படம் ஹிந்தியில் ரிலீசாகி மிகப்பெரிய் அளவில் ஹிட்டானால் அப்படியே அதை தமிழிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.