அக்டோபர் 15-ஆம் தேதியன்று வெளியாகிறது ‘சனக்’!

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

உலகின் மிகப்பெரிய அதிரடி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவரான வித்யூத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சனக்’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.

ஹிந்தி திரை உலகில் பணய கைதியை மையப்படுத்திய திரைப்படங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ‘சனக்- ஹோப் அண்டர் சீஜ்’ திரைப்படத்தை மிக பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார்.

Actor Vidyut Jammwaldirector kanishk varmaSanak movie