தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய்.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் இவரும் ஒருவர். ‘மெர்சல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது முருகதாஸ் கூட்டணியில் டைட்டில் வைக்கப்படாத 62வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய ரசிகர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் முடிந்தவரை ஓடோடிச் சென்று உதவிகள் செய்யும் பழக்கம் உடையவர் விஜய். அவரைப் போலவே விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கிப் புயல் புரட்டிப் போட்டது. இதனால், ஏராளமான மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத கன்னியாகுமரி மீனவ மக்களில் 30 குடும்பத்தினர்களுக்கு விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.
விஜய் ரசிகர்களின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.